வியாழன், 22 செப்டம்பர், 2011

கோபமான சோனா, போலீசுக்குப் போய்விட்டார் .

பாலியல் ரீதியாக தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்னிடம் வம்பு செய்து அத்துமீற முயன்றார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சோனா. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி சிகிச்சையும் பெற்றுவருகிறார் சோனா.
என்ன வில்லங்கம்?
சோனா சொல்கிறார்!
""மங்காத்தா' படத்தின் வெற்றியைக் கொண்டாடு வதற்காக அந்தப் படத்தில் நடித்திருக்கும் வைபவ் தி.நகர்ல இருக்கும் தன்னோட வீட்டில் பார்ட்டி கொடுத்தார். "மங்காத்தா' டைரக்டர் வெங்கட்பிரபுவும் அவரோட தம்பி நடிகர் பிரேம்ஜி அமரனும் என்னோட நண்பர்கள். அதனால் அந்த பார்ட்டிக்கு என்னையும் கூப்பிட்டாங்க.
கடந்த புதன்கிழமை இரவு நடந்த இந்த மது விருந்தின்போது தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் திடீர்னு என்மேல பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவமானத்தால் கூனிக்குறுகிப் போனேன். பிழைப்புக்காக கவர்ச்சியாக நடிக்கிறேனே தவிர... நான் தப்பானவள் இல்லை. ஏற் கனவே ஒருமுறை என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினார் சரண். அவரை மன்னித்துவிட்டு அவருடன் பேசுவதைத் தவிர்த்துவந்தேன். இப்போ மறுபடியும் தப்பா நடந்து, எனக்கு மன உளைச்சலை உண்டாக்கிட்டார்.'' சரண் சாடுகிறார்!
பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் பார்ட்டியில் நடந்ததாக சோனா சொல்லும் விஷயம் தப்பானது. ரொம்ப வருடமாக சோனா வை நட்பு ரீதியாகத் தெரியும். அவரிடம் எப்படி தப்பாக நடப்பேன்? வெங் கட்பிரபு இயக் கத்தில் நான் ஒரு படம் தயாரிக்கப்போறேன். சோனாவும் வெங்கட்பிரபுவை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போறார். இதுபற்றித்தான் சோனாவிடம் பேசினேன்.''
வெங்கட்பிரபு விளக்குகிறார்!
""கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்த பிறகு விரைவில் உண்மை வெளியே வரும். அதேசமயம் இன்னொரு முக்கியமான விஷயம்... "இது "மங்காத்தா' பட வெற்றிக்காக கொடுக்கப்பட்ட பார்ட்டி இல்லை. வழக்கமான நண்பர்களுக் கிடையேயான விருந்துதான்''

-இப்படி இணையதளம் மூலம் தன் நண்பர்களுக்கு விளக்கம் சொல்லியிருக்கும் வெங்கட்பிரபு, மீடியாக்களுக்கு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

ஒரு சம்பவம் நடந்தால் அதை நாலுபேர் நாலு விதமா பேசுவாங்க. சம்பந்தப்பட்ட மூன்று பேரும் மூன்றுவிதமாக சொல்ல... நாலாவது விதமாய் சொன்னார்கள் நம்மிடம் பேசிய சில சினிமா புள்ளிகள்.

"இம்'மென்றால் மப்பு பார்ட்டி... "ஏன்?' என்றால் "கிக்'குப் பார்ட்டி. காரணமே இல்லேன்னாலும் காக்டெயில் பார்ட்டினு பார்ட்டியில் "கலந்து' கொள்ளுவது வெங்கட்பிரபு கோஷ்டியின் ஸ்டைல்.

வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய், வைபவ், எஸ்.பி.பி. சரண், சோனா ஆகியோர் இந்த ஊத்து பார்ட்டியில் கூத்துப் பண்ணுவார்கள். சிம்பு வைக்கிற பார்ட்டியில், த்ரிஷா வைக்கிற பார்ட்டிகளில் இந்த ஜாலி கோஷ்டியும் ஆஜராகிவிடும்.

இப்படி கமுக்கமாக போய்க்கிட்டிருந்த காக்டெயில் மோதல்தான் இப்ப காவல்துறை வரைக்கும் வந்திருச்சு.

வெங்கட்பிரபுவை வைத்து படம் தயாரிக்கவிருந்த சோனா அதை ஒத்திப்போடும் மனநிலையில் இருந்தார். ஏற்கனவே வெங்கட்பிரபுவை நடிக்க வைத்து "உன்னைச் சரண டைந்தேன்' படத்தையும், வெங்கட் பிரபுவை முதன்முதலாக இயக்குநராக்கி "சென்னை -28' படத்தையும் எஸ்.பி.பி.சரண் தயா ரித்திருக்கிறார். அதனால் திரும்பவும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை (சென்னை-28ன் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது) தயாரிக்க சில மாதங்களாகவே திட்டமிட்டிருந்தார் சரண். இப்போது "மங்காத்தா' வெற்றியும், திரும்பவும் வெங்கட்பிரபுவுக்கு கால்ஷீட் தருவதாக அஜீத் சொல்லியிருந்ததும் சோனாவை சலனப்படுத்த... ஒத்தி வைத்திருந்த தயாரிப்பு திட்டத்தை திரும்பவும் தொடங்க எண்ணினார். இது குறித்து ஏற்கனவே சோனாவுக்கும் சரணுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

சமீபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கும் சோனா ஸ்டிக் உதவியுடன் நடக்கிறார். இந்த பார்ட்டிக்கும் அப்படித்தான் வந்திருக்கிறார்.

ஆண் நண்பர்களைப் பார்த்தாலே செஸ்ட்டில் குத்திப் பேசு வது சரணின் ஹேபிட். இதற்கு முன்பே சோனாவிடம் இந்த ஹேபிட்டை கையாண்டதற்காக வசவு வாங்கியிருக்கும் சரண்... இப்போதும் அப்படியே செய்ய, சோனா எச்சரித்திருக் கிறார். அப்போது "நீ என்ன யோக்யமா?' என சொல்லிக் காட்ட... கோபமான சோனா, போலீசுக்குப் போய்விட்டார் ...இப்படி விவரித்தார்கள். சோனாவை சமாதானப்படுத்தவும் சரண் மீது தப்பிருந்தால் மன்னிப்பு கேட்க வைக்கும் விதமாக வும் வெங்கட்பிரபு, வைபவ், பிரேம்ஜி ஆகியோருடன் சரணின் அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோனாவை சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் சில விதமான சந்தோஷங்களையும், பலவிதமான சங்கடங் களையும் விரும்பியோ விரும்பாமலோ, எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த சச்சரவுகளையும் சலசலப்புகளையும் தொடராக எழுத தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில்.... சோனாவின் விவ காரம் கிளம்பி யிருக்கிறது

thanks nakkeera

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக