புதன், 21 செப்டம்பர், 2011

49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர் பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள்

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 49 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்த மாவட்டங்களில் பெருமளவில் போலி டாக்டர்கள் புழங்கி வருவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் நான்கு மாவட்ட போலீஸாரும் குவித்தனர். இதில் 49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர். இவர்களில் யாருமே கம்பவுண்டராக கூட இருந்தது கிடையாதாம். பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள் ஆனவர்கள்.

ஏதோ எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு டாக்டர் ஆனவர்களைப் போலவே, பக்காவாக கிளினிக் வைத்து மக்களின் உயிருடன் விளையாடிய இவர்களைப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

போலி டாக்டர் வேட்டை தொடரும் என காவல்துறை தெரிவித்திருப்பதால் பிடிபடாமல் எஸ்கேப் ஆகியுள்ள மற்ற போலிகளும் கிலியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக