வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பொலிஸாரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை!

வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் பொலிஸாரின் நியமனத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பொலிஸாரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை!

வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவ்வாறானதொரு தேவை இருப்பின் அதனை அமெரிக்காவுக்குள் அவர் அமுல்படுத்தட்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொலிஸாரின் நியமனத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற தெரிவோ அல்லது அந்தந்த மொழியைக் கொண்டோர் அவரவர் பிரதேசங்களில்தான் கடமையாற்ற வேண்டுமென்றோ இல்லை. இந்த நாட்டில் எவரும் எங்கும் கடமையாற்ற முடியும். எனத் தெரிவித்துள்ளார். இதே கருத்தினையே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக