ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யாழ் நகரப் பகுதிகளில் கண்காணிப்புக் கமராக்கள்!

யாழ் நகரப் பகுதிகளிலும் இராணுவ முகாமை அண்டிய பிரதேசங்களிலும் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துவதற்குப் இராணுவத் தரப்புத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் தற்போது பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் போன்றே இவையும் செயற்படவுள்ளன.எதிர்காலத்தில் இலங்கையின் பாதுகாப்புத்துறையில் நவீன தொழில்நுடப் முறைமைகளைப் பாதுகாப்பு அமைச்சு கையாளவுள்ளது. இதனடிப்படையில் அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலும் இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக