வியாழன், 29 செப்டம்பர், 2011

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Sona
தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.சரண் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக முன்பு சோனா கூறினார். ஆனால் சோனாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சோனாதான் பாலியல் உணர்வை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார் என்று கூறினார்.

இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக