திங்கள், 5 செப்டம்பர், 2011

TNA இனவாதக் கருத்துக்களை விதைத்து பிரசாரங்களை முன்னெடுத்தது


douglas-3010- ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சண்டே ஒப்சர்வருக்கு வழங்கிய பேட்டி
  • கேள்வி : யுத்தத்தின் பின்னர் அரசு வட புலத்தைக் கட்டியெழுப்பப் பல மில்லியன்களைச் செலவிட்டு அபிவிருத்தியை முன்னெடுத்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களையும் தீவிரமாகச் செய்து வந்தது. வட புலத் தேர்தல் முடிவுகள் உங்களுக்குத் திருப்தி அளிக்கின்றதா?
பதில் : அரசியல் ரீதியான சில விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நேர்மையாக எடுத்துரைத்தே பிரசாரம் செய்தோம். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் பிரசாரம் இன உணர் வைத் தூண்டும் வகையில் அமைந்தது. இது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடை யிலான போட்டிப் பிரச்சினை. தமிழர் வாழ்வதா? சாவதா? என்ற பிரச்சினை. சிங்கள கட்சிக்குத் தமிழன் வாக்களிக்க முடியுமா என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் என்ற வகை யிலான இனவாதக் கருத்துக்களை விதைத்து பிரசாரங்களை முன் னெடுத்தது.
யாழ். மாநகர சபை யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனான சங்கிலி யன் சிலையை மீளப்புனரமைத்தது. ஆனால் கூட்டமைப்பின் பிரசாரங்கள் வேறு கண்ணோட்டத்தில் அமைந்தது. அரசு வெற்றி பெறுமானால் இச்சிலை உடைக்கப்பட்டு விடும். அந்த இடத்திலே புத்தரின் சிலையே வைக்கப்படும் என்பதைத் தமிழ் நெஞ்சங்கள் உணர வேண்டும் என்றவாறு துவேஷத்தைக் கிளப்பும் பிரசாரத்தை கூட்டமைப்பு மேற்கொண்டது.
புலம்பெயர் தமிழர் கூட இப்பிரசாரத்துக்கு வழிப்போக நேர்ந்தது. இத்தகைய பொய்ப் பிரசாரத்தால் மருண்ட வாக்காளர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர். அரசுக்குரிய வாக்குகள் குறைவடைந்தன. கூட்டமைப்பின் திட்டமிட்ட பிரசாரங்களால் நாம் தோற்க நேர்ந்தது.
  • கேள்வி : உங்களது கட்சியான ஈ.பி.டி. பி. அரசின் உண்மையான நிலைப்பாட்டை யும் அபிவிருத்தி நோக்கையும் மக்களுக்கு எடுத்துக் கூறி அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முடியவில்லையா?
பதில் : ஆரம்பத்திலே வெற்றி எமது பக்கம் இருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 6 அல்லது 7 உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமே கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இனத் துவேஷப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
  • கேள்வி : வடக்கிலே குறிப்பாக யாழ்ப்பாணத்திலே அண்மையில் அசம்பாவி தங்கள் இடம் பெற்றன. இதற்கான காரணம் படையினர் என்றும் உங்களது கட்சியென்றும் குற்றம் சுமத்தப்படுவது பற்றி என்ன கூறவிரும்புகின்aர்கள்?
பதில் : அந்த அசம்பாவிதங்களில் ஒன்று உள்ளூர் பத்திரிகைக் காரியாலயமொன்றின் மீது தாக்குதல். அதே பத்திரிகை அரசியல் அடிப்படையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவானது. அதன் உரிமையாளர் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர். அண்மையில் அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியரே தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அடையா ளம் காணப்பட்டாலும் அதனால் அந்தப் பழி படைகளின் மீதும் எமது கட்சித் தொண்டர்கள் மீதும் போடப்படுகின்றது. அந்த அசம்பாவிதம் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
தற்போது அது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதால் அதுபற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை. அதற்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். அவர் பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டு டியூசன் கொடுத்து வந்துள்ளார். டியூசன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் பெற்ற பணம் தொடர்பில் ஒரு மாணவியின் சகோதரர்களால் தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விபரங்களை வெளியிடாமல் படை மீதும் எமது கட்சி மீதும் அநியாயமாகப் பழி சுமத்தப்படுகின்றது. தற்போது எல்.ரி.ரி.ஈ. இல்லாத படியால் இப்பழி சுமத்தப்படுகின்றது. விசாரணைகள் முடிவடைந் ததும் உண்மை வெளிவரும்.
  • கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில தமிழ் அமைப்புக்களும் வட புலத்தில் இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்துவதில் ஏதும் உண்மை இருக்கிறதா?
பதில் : இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை. உண்மையில் என்ன நடைபெறுகின்றதென்றால் இராணு வத்தைப் படிப்படியாகக் குறைத்து பொதுமக்கள் சாதாரண வாழ்வைப் பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. படிப்படியாகப் பொது மக்கள் சுயாதீன மான வாழ்வைப் பெற்று அதை அனுபவிக்கின்றார்கள்.
  • கேள்வி : வடக்குக்கான மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சருக்கான வேட்பாளனாகப் போட்டியிட நீங்கள் விரும்புவதாகத் தெரிவிக் கப்படுகின்றது. எந்த அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்தீர்கள் என்று கூறுவீர்களா?
பதில் : வடமாகாண சபையின் முதலமைச்சராக வரவேண்டுமென்ற விருப்பம் எனக்குண்டு. ஆரம்பத்திலிருந்து அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மாகாண சபைத் தேர்தல் நாளை நடப்பதாக இருந்தாலும் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தை இராஜினாமாச் செய்துவிட்டு நான் தேர்த லில் முதலமைச்சர் வேட்பாளனாகப் போட்டிவிட ஆயத்தமாக இருக்கின்றேன்.
  • கேள்வி : அப்படியாயின் நீங்கள் தேசிய அரசியலை விட்டுவிட்டுப் பிராந்திய அரசியலில் ஈடுபட விரும்புகின்aர்கள் எனக் கருதலாமா?
பதில் : மாதத்தின் இறுதி அமைச்ச ரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுக்கும் அழைப்பை ஏற்று முதலமைச்சர்கள் அக்கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
மாகாண முதலமைச்சர்களை அமைச்சரவையின் உறுப்பினராக இருக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கூட அரசு கொண்டு வரக்கூடும். அவ்வாறு நடைபெறுமாயின் மாகாண முதலமை ச்சர்கள் தேசிய ரீதியாகத் தீர்மானங்களை எடுக்க வும், மாகாண அல்லது பிராந் திய ரீதியாக நடைமுறைப்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கலாம் அல்லவா? அவ்வாறான நிலையில் தேசிய அரசியலில் இருந்து தூரப்படுவதாக எண்ண முடியாதல்லவா?
  • கேள்வி : வடக்கு, கிழக்கு மக்களுக்கிருந்த ஒரே பிரச்சினை எல்.ரி.ரி.ஈ. யின ரின் பயங்கரவாதம் தான். அவர்கள் தோற்கடிக் கப்பட்டதால் தமிழ் மக்க ளுக்குத் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : எனது கருத்துப்படி தமிழ் மக்களுக்கு இரு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று பயங்கர வாதப் பிரச்சினை. அது ஒழிக்கப்பட்டு விட்டது. அடுத்தது அரசியல் ரீதியான பிரச்சினை. பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வ மான தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கிறது. தெரிவுக்குழு மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நம்பலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரிவரத் தீர்க்கும் தகைமை பாராளுமன்றத் தெரிவுக்குழு வுக்கு இருக்கின்றது என்றே நான் திடமாக நம்பு கின்றேன். குழுவின் தீர்மானங்கள் சட்டவாக்கம் பெற்று அரசினால் நடைமுறைப்படுத் தப்படும்.
  • கேள்வி : பாராளுமன்றத் தெரிவுக் குழு எப்போது நியமிக்கப்படும்?
பதில் : இந்த மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் அதனை அமைப்பதற்கான ஒழுங்குகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • கேள்வி : இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லை தாண்டி அத்து மீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பதுதான் வடக்கிலுள்ள மீனவர்களுக்கான பிரதான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பயனளிக்கவில்லை. காலத்துக்குக் காலம் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையேயான இப்பிரச்சினை முற்றிக் கொண்டு வருகின்றது. இதை எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : இரு நாட்டு மீனவ சமூகங்களும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இரு நாடுகளுக்குமிடையிலான பொதுவான கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் இரு பகுதி மீனவர்களும் சண்டை, அடிதடி வன்முறையில் ஈடுபடாமல் புரிந்துணர்வுடன் தொழிலை மேற்கொள்ள வேண்டுமெனவும் பேசப்பட்டன. ஏற்கனவே இவ்வாறு உடன்பாடு கண்ட விஷயத்தை அரசுகள் இரண்டும் கவனத்தில் எடுத்து அமுல்படுத்த வேண்டும்.
  • கேள்வி : ஆனால் அரசும் அரசும் பேசி இவ்விடயத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் சில தோல்வியில் முடிவுற்றனவே?
பதில் : இரு அரசுகளும் ஒன்றிணைந்து பேசி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைகள் இருந்தன. அவ்வேளை இருந்த பயங்கரவாத சூழ்நிலை காரணமாகவே அம்முயற்சிகள் தோல்வியுற்றன. கடலில் பயங்கரவாதப் பிரச்சினைகள் இருந்த வேளைகளில் பாதுகாப்புக் கருதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக் கடல் எல்லையுள் வந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக அமைந்தது.
இலங்கை மீனவர்கள் தற்போது மீன்பிடிக்கத் தடையேதும் இல்லையாதலால் அவர்கள் தொழிலில் ஈடுபடும் இடத்துக்கு இந்திய மீனவர்கள் வருகிறார்கள். இந்திய மீனவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து இலங்கைக் கடல் எல்லை தாண்டாமல் தமது தொழிலைச் செய்ய வேண்டும். அரசுகள் இரண்டும் பேசிக் கண்டு கொண்ட இணக்கப்பாடு அம்சங்களுக்கு மதிப்பளித்து இரு பகுதி மீனவர்களும் செயல்பட வேண்டும்.
  • கேள்வி : தமிழக அரசு இலங்கைக்கு எதிராக எடுக்கும் தீர்மானங்கள் இலங்கை - இந்திய நல்லுறவைப் பாதிக்கும் சாத்தியங்கள் உள்ளனவா?
பதில் : இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றோ அல்லது கச்சதீவு தொடர்பான தமிழ் நாட்டு அரசியல் தீர்மானங்கள் இந்திய - இலங்கையின் நல்லிணக்கம் நல்லு றவை எந்த வகையிலும் பாதிக்காது.
  • கேள்வி : ஏற்கனவே சர்வகட்சி மாநாடென்றும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவென்றும் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கப்பட்டது. முன்னைய நடவடிக்கைகளுக்கும் தற்போது அரசினால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு மிடையே என்ன வேறுபாடுகள் உள்ளனவென்று கூறுவீர்களா?
பதில் : முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமான ஒரு குறிக்கோள் இல்லை. காலவரையறையும் இல்லை. ஆனால் ஜனாதிபதி அமைக்கவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஒரு காலவரையை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலத்துள் பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. எல்.ரி.ரி.ஈ. தற்போது இல்லாத சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் புலிகளின் நெருக்குதல் இன்றிச்சுயமாகவும், சுயாதீனமாகவும் தீர்மா னங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
அரசுக்கு மூன்றிலிரண்டு பலமும் பாராளுமன்றத்தில் இருக்கின்றது. எனவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களைப் பாராளுமன் றமே இலகுவாக அரசியல் சட்டமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் வசதிகள் உள்ளன. அமைக்கப்படவுள்ள இத் தெரிவுக் குழு தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்க மேற்கொள் ளும் தீர்மானங்களை அமுல்படுத்தத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள் ளார். எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
  • கேள்வி : குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசுடன் நீங்கள் எவ்வாறான உறவைப் பேணி வருகின்aர்கள்?
பதில் : தமிழ் நாட்டு அரசுடன் விசேடமாக எந்த உறவும் எமக்கில்லை. எனினும் அரசியல் விஷயங்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசியல் வாதிகள் சிலருடன் நான் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுண்டு.
  • கேள்வி : தமிழ்க் கூட்டமைப்புடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : அவர்கள் ஒரு காலக்கெடுவை விதித்துள்ளார்கள். அரசு அதற்கு முக்கியத்து வம் அளிக்கவில்லை. இந்தப் பிச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் தமிழ்க் கூட்டமைப்புக்கு இல்லையென்றே நான் கருதுகின்றேன். பிரச்சினையை இழுத்தடிப்ப தையே அவர்கள் விரும்புகின்றார்கள். அதுதான் அவர்களது அரசியல் போக்கு. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அவர்கள் கலந்தாலோசிப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாற்று நடவடிக்கை ஏதும் சாத்தியமில்லை. அவர்கள் அரசுடன் பேசியே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதைவிட வேறு வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
  • கேள்வி : வடபுலத்திலும் வன்னியிலும் மீளக்குடியேறிய மக்களுக்கு அரசின் உதவி நிறுத்தப்பட்டதால் மக்கள் கஷ்ட துன்பங்களை எதிர்கொள்வதாகப் பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. அதில் உண்மை இருக்கின்றதா?
பதில் : அரசு உதவிகளை வழங்குவதில் சில இடங்களில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனினும் மீளக் குடியேறிய மக்களுக்கு முடியுமான அளவு அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது. மக்களின் வாழ்வு சீரடைய அரசு இயன்றவரை உதவி வருகிறது. அரசு உதவிகள் எங்கேயும் எவ்வேளையிலும் நிறுத்தப்படவில்லை.
  • கேள்வி : வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வது பற்றிய உங்களது திட்டங்கள் எவை? எவ்வாறான திட்டங்களை நீங்கள் அமுல்படுத்த இருக்கின்aர்கள்?
பதில் : வடக்கின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வடக்கில் இருந்த கைத்தொழில் நிலையங்களை மீளமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீளக் குடியமர்ந்த மக்கள் தொழில் வாய்ப்பைப்பெறத் தனியார் அமைப்புகளைக் கொண்டு புதிய கைத்தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இருக்கிறோம். மக்களது தொழிலில்லாப் பிரச்சினை தீர எமது புதிய முயற்சிகள் பெரிதும் பயன்படும்.
அச்சுவேலிக் கைத்தொழில் பேட்டையின் புனரமைப்புக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்வதன் மூலம் அப்பேட்டையை சிறப்பாக இயங்க வைக்க முடியும். போக்குவரத்தை இலகுபடுத்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஆனையிறவு உப்பளத்தையும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது போலவே வடக்கில் வளத்தை மேம்படுத்தப் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
-தினகரன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக