செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பாக்கியரஞ்சித் அடிகளார் புலிகளால் கொல்லப்பட்டு 4வது வருடம்.

வண பிதா பாக்கியரஞ்சித் அடிகளார் புலிகளால் கொல்லப்பட்டு இன்றுடன் (26-09-2011) 4வது வருடம்.

மன்னாரில் சமூகத் தொண்டாற்றிக்கொண்டிருந்த நீக்கிலாப்பிள்ளை அடிகளார் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து புலிகளின் கிளேமோர்க் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். தங்களது கட்டளைக்கு அடிபணியாததால் புலிகள் பாதிரியாரை நேரடியாகக் கொல்ல முடியாமல் அல்லது கைது செய்து பங்கருக்குள் போட முடியாத நிலையில் தங்கள் கட்டுப்பாட்டுப்பகுதியிலேயே கண்ணிவெடி வைத்துக் கொன்றுவிட்டு ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் என விளம்பரம் செய்தனர். இந்தக் கிளோமோர்க் கண்ணிவெடியை வெடிக்கச் செய்தவருக்கு தான் பாதிரியாரைத்தான் கொல்லப் போகிறேன் என்று தெரிந்திருக்கவில்லை.
துரொகி ஒருவர் வானில் இந்த வழியால் வருகிறார் அவரைக் கொல்ல வேண்டும் என்ற புலிகளின் கட்டளையை நிறைவேற்றியவர் அதன் பிறகுதான் தான் கொன்றது நீக்கிலாப்பிள்ளை அடிகளார் என்று தெரிய வந்தது. அவர் தன்னுடைய தவறை பலரிடம் ஒப்புவித்திருக்கிறார்.
இப்படிப் புலிகளின் சதியில் கொல்லப்பட்டவர்கள் பலர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ், சிவனேஸ்வரன், மற்றும் கருணாரட்ணம் அடிகளார். வன்னியில் இன்று புலிகள்  தொடர்ந்தும் இருந்திருந்தால் எஞ்சிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார்கள். தங்கள் கட்டுப்பாட்டுப்
பகுதியிலும், இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் புலிகள் கொலைகளை நிகழ்த்திவிட்டு பழியை அரசாங்கத்தின் மேல் சுமத்துவதன்மூலம் தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை அரசாங்கத்தில் வெறுப்பை ஏற்படுத்தவும் மேலும் அதன் பலனாக சிறுவர்களை இயக்கத்தில் இணைக்கவும் புலிகள் திட்டமிட்டு சொந்த இனத்தை அழித்தனர். வங்காலையிலும் அல்லைப்பிட்டியிலும் இடம் பெற்ற குடும்பத்தினரின் படுகொலையும், மடுவில் வைத்து தமிழ்ப் பிள்ளைகள் பிரயாணம் செய்த பஸ்சின் மீது புலிகள் நடாத்திய கிளேமோர்க் கண்ணிவெடித் தாக்குதலும் உதாரணமாகும்.
எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கக்கூடாது என்பது பிரபாகரனின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. ஆனால் அவர்களை சதி செய்து கொன்றுவிட்டு பழியை இராணுவத்தின் மீதோ அல்லது ஒட்டுக்குழுக்கள் என்று பழிகளைச் சுமத்தி வெற்றி Add an Imageகண்டிருக்கிறது புலிகள் இயக்கம். கிட்டு மீதான கொலைமுயற்சி புலிகளாலேயே நிகழ்த்தப்பட்டது. ஆனால் அந்தக் கொலை முயற்சியை மாற்று இயக்கங்களின்மேல் பழியைப் போட்டு கந்தன் கருணை வீட்டில் வைத்து 56 மாற்று இயக்க உறுப்பினர்களை அருணா படுகொலை செய்தது தெரிந்த விடயம். பின்னாளில் மாத்தயாவிற்கு மரண தண்டனை கொடுக்கும்போது கிட்டுவின் கொலை முயற்சி மாத்தயா குழவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று மாத்தயாவின்
மேல் பழியைச் சுமத்தியவர் பிரபாகரன். அப்போ அன்று கூறியது பொய்தானே. அதற்காகத்தானே கந்தன்கருணைப் படுகொலையும் இடம்பெற்றது.
குமார் பொன்னம்பலத்தை சுட்டுக் கொன்ற புலி உறுப்பினர் தப்பித்துவிட்டார். அதனால் பிரபாகரன் குமார் பொன்னம்பலத்திற்கு மாமனிதர் பட்டம் கொடுத்துக் கௌரவித்தார். ஆனால் அமிர்தலிங்கத்தையும்,யோகேஸ்வரனையும் கொன்ற அறிவு,விசு என்ற புலி உறுப்பினர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. அதனால் பிரபாகரனால் அவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து மாமனிதர் பட்டம் கொடுக்க முடியவில்லை. மகேஸ்வரன் கொலையும் அப்படித்தான். கொலையாளி மாட்டிக் கொண்டுவிட்டார். சாட்சி சொல்ல யாரும் முன்வராததால் கொலையை நிரூபிக்க முடியவில்லை. பொய்களைத் திரும்பத் திரும்பக் கூறி மக்களுக்கு உண்மையாக்குவதில் புலிகள் இன்றுவரை  தொடர்ந்தும் வெற்றிகண்டு வருகிறார்கள்.
இதுபோலத்தான் வன்னியில் தப்பியோடிய தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு இராணுவம் கொன்றதாகப் பழிபோட்டதும்! தயா மாஸ்டர்,ஜோர்ஜ் மாஸ்டர், கனகரத்தினம் எம்.பி போன்றோரும் வன்னியில் உயிர் தப்பிய மக்களும் இந்த உண்மைகளைக் கூறுகின்றனர். ஆனாலும் கோயபல்சுகளை நம்பியவர் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இராணுக் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அவர்கள் அப்படிப் பொய் சொல்லுகின்றனர் என்றும் காரணம் கூறி உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக