செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இந்தியாவில் இணைய தளம் மூலம் 34,110 கோடி மோசடி!

இந்தியாவில் ஆண்டுதோறும் இணைய தளம் மூலம் 34,110 கோடி மோசடி!

மும்பை: இந்தியாவில் ஆண்டு தோறும் இணைய தளம் மூலம் நடக்கும் மோசடியால் ஏற்படும் இழப்பு 34,110 கோடி ஆகும். ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலகத்தை பொறுத்தவரையில் இந்த மோசடியால் ஏற்படும் இழப்பின் அளவு ஆண்டு ஒன்றுக்கு 388 பில்லியன் (18,360,159,881,591 ஆகும்). இணைய தள மோசடி மூலம் விரயமாகும் காலத்தின் அளவானது, கறுப்பு சந்தை மூலம் விரையம் ஆகும் காலத்தின் அளவையும் விடவும் கணிசமான அளவு அதிகமாகும் என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மோசடி காரணமாக இணைய தளத்தை பயன்படுத்துவோர் கூடுதல் பணத்தை இழப்பார்கள் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில், 69 சதவீதம் பேர் மோசடி காரணமாக பணத்தை இழந்துள் ளனர். மேலும் ஒவ்வொரு வினாடிக்கும் 14 பேர் வீதம் இந்த மோசடி காரணமாக பணத்தை இழந்து வருகிறார்கள். மொபைல் போன் மூலம் இணைய தளத்தை பயன்படுத்துவோரும் இந்த மோசடியால் பாதிக்கப்படுவார்கள். இவர்களில் 18 வயதுக்கும் 31 வயதுக்கும் உட்பட்டவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

மொபைல் போன் மூலம் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் 16 சதவீதம் பேர் மட்டும் மிகவும் நவீன பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தியுள்ளனர். இணைய தளம் மூலம் நடக்கும் மோசடி குறித்து 74 சதவீதம் பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கான நவீன சாப்ட்வேர் பாதுகாப்பு கருவிகள் தங்களிடம் இல்லை என்று 41 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

47 சதவீதமானோர் மோசடி நடக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக தங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை அடிக்கடி சரி பார்க்கிறார்கள். 61 சதவீதமானோர் சிக்கலான பாஸ்வேர்டை பயன்படுத்துவதில்லை. அல்லது அதனை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக