வியாழன், 29 செப்டம்பர், 2011

வாச்சாத்தி ஏரியும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 பெண்களும்


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் கடந்த 1992ம் ஆண்டில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த கூட்டுக்குழுவினர் சந்தன மரம் கடத்தல் புகார் தொடர்பாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப்புகார் குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

more pictures

சுமார் 20 ஆண்டுகளாக பல்வேறு கோர்ட்டுகளில் நடந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் நடந்தது. அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் நாள் பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பின் செப்டம்பர் 29ந்தேதியான இன்று வெளியானது.


வாச்சாத்தி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார்.


18 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வாச்சாத்தி ஏரி





































படங்கள் : தர்மபுரி வடிவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக