ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மாற்றீடு இல்லை என்ப தால் தொடர்ந்தும் TNA க்கு வாக்களிக்க வேண்டியுள்ளதாக


வடமாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அவலங்களை அனுதாபமாக்கிப் பிரசாரம் செய்து தமிழ் மக்களது மனங்களை வெற்றிகொண்டதன் விளைவாக தமிழ்க்கூட்டமைப்பினரால் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற முடிந்தது.
தற்போது தமிழ்க் கூட்டமைப்பு தான் கைப்பற்றியுள்ள சபைகளில் மக்களுக்கான பணியா ற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு நிச்சயம் தேவை ப்படும். அரசுடன் கூட்டமைப்பு நல்லுறவைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. இவ்வி டயத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்பது மக் கள் முன் கேள்விக்குறியாகவே உள்ளது.
இத்தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்களின் இறுதிநேர அனுதாப உரைகளுக்கும், பொய்யான வாக்குறுதி களுக்கும், இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களுக்கும் கிடைத்த வாக்குகளே என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
இறுதிநேர தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களைக் கவர்ந் திழுப்பதற்காக இனவாதக் கருத்துக்களைத் தூண்டிவிட்டமையை சகலரும் அறிவர். வட பகுதியின் அபிவிருத்தியில் அதிக அக்கறை கொண்டு அமைச்சர்கள் குழு நேரடியாக வந்து மக்களுக்குச் சேவைகளை வழங்கியபோது இனவாதத்தைத் தூண்டும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வந்தனர். உண்மையில் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் குழு வடபகுதிக்கு வந்தமையினால் வடக்கில் நடந்த பாரிய அபி விருத்தித் திட்டங்கள் குறித்தும், அதனால் மக்கள் அடைந்துவரும் நன்மைகள் பற்றியும் தமிழ்க்கூட்டமைப்பினருக்குத் தெரியாதா அல்லது தமது அரசியலுக்காக தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?
ஆளும் கட்சியினால் அதிக சபைகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும் மக்களுக்கான அர சாங்கத்தின் பணிகள் தொடரும். அரசாங்கம் வடபகுதி மக்களை என்றுமே கைவிடாது. தேர்தலில் வாக்களிக்காவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வது அரசாங்கத்தின் கட மையாகும். அதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது. எதிர்வரும் காலத்தில் மேலும் பல மக்கள் நலன்பேணும் திட்டங்களை முன்னெடுத்து வடபுல மக்களின் நன் மதிப்பை அரசு பெறும்.
முப்பது வருடங்களாக போராட்டம், யுத்தம் என்று புலிகளினதும், தமிழ்க் கூட்டமைப்பின தும் வீரமான ஆசைவார்த்தைகளுக்கு மயங்கிக் கட்டுண்டு இருந்த வடக்கு மக்கள் தற் போதுதான் அதிலிருந்து விடுபட்டு வருகிறார்கள். தமிழ்த் தலைவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் சிலர் இன்னமும் மக்களைத் தமது மாய வலைக்குள் தமது பேச் சாற்றலால் மயங்க வைத்துள்ளனர். எனினும் இப்போதுதான் மக்கள் அவற்றிலிருந்து மெல்ல மெல்ல விலகி வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் இதற்குச் சான்று பகர்கின்றன. முன்னைய தேர்தல்களு டன் ஒப்பிடுகையில் ஆளுங்கட்சிக்கு இத்தேர்தலில் கிடைத்துள்ள ஆசனங்கள், சபை கள், விருப்புவாக்குகள் எல்லாமே அதிகரித்துக் காணப்படுகின்றன. மக்களைச் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க தமிழ்க் கூட்டமைப்பினர் விட்டிருந்தால் ஆளுங்கட்சிக்கு மேலும் பல சபைகள், ஆசனங்கள் இலகுவாகக் கிடைத்திருக்கும்.
சில தமிழ் இணையத்தளங்கள் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என்றும் தமது ஒற்றுமையை உலகறியச் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளன.
உண்மையில் இந்தத் தமிழ் ஊடகங்களோ அல்லது தமிழ் இணையத்தளங்களோ தெரிவித் துள்ள இக்கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. தமிழ் மக்கள் தமக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் எனும் விடயத்தில் உறுதியாகவே இருந்து வருகின்றனர். விடுதலைப்புலிகள் இருந்தபோது அத்தீர்வு புலிகளின் இராணுவ ரீதியிலான பலத்தால் தமக்குக் கிடைக்குமென தமிழரின் ஒரு சிறுதரப்பு நம்பியிருந்தது. ஆனால் உலக நாடு கள் பலவற்றாலும் இராணுவ பலம் கொண்ட அமைப்பு எனப் புகழப்பட்ட புலிகள் இய க்கம், இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டதும் வேறு வழியில்லாத நிலையில் அச்சிறு குழுவினர் புலிகளுடன் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூலமாகத்தான் தமக்குத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்பது இவர்களது நப்பாசையாக உள்ளது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு பயன்படுத்தி தேர்தலில் வெற்றியும் கண்டுள்ளது. உண்மையில் அரசாங்கத்துடன் தமிழர் தீர்வு தொடர்பாக ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பு எந்த வொரு ஆக்கபூர்வமான தீர்வினையும் முன்வைக்காத நிலையிலேயே கண்துடைப்பாக அதில் கலந்து கொண்டு வருகிறது.
உண்மையாகவே தீர்வு குறித்த அக்கறை இவர்களுக்கு இருந்திருந்தால் இதுதான் எமது தீர் விற்கான நகல் என்று கூறியிருக்கலாம். ஆனால் இவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அப்படியானதொரு தீர்வை முன்வைத்திருந்து பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தால் அர சாங்கம் அதற்குரிய பதிலைத் தந்திருக்கும். மாறாகத் தமிழ் மக்களை தமது பக்கம் தொடர்ந்தும் வைத்திருப்பதே தமிழ் கூட்டமைப்பின் நோக்கமாகும். அதற்கு அவர்கள் தீர்வுப் பிரச்சினையை ஒரு துரும்பாகப் பாவித்தனர்.
அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு வேலையில்லாது போய் விடும். அதன் பின்னர் மக்கள் இவர்களைப் பொருட்டாகக் கொள்ளமாட்டார்கள். அதி லும் தேர்தல் காலங்களில் தமிழ்க் கூட்டமைப்பு தீர்வு விடயத்தை வைத்தே மக்களைத் தம்பக்கம் திசைதிருப்புவது வழமையாகிவிட்டது. தமிழ் மக்களும் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் எனத் தெரிந்திருந்தும் மாற்றுவழியின்றி மீண்டும் மீண்டும் ஒரே குழியில் விழுந்து எழும்புகின்றனர்.
இப்போது தமிழ்க் கட்சிகள் பலவும் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. அதாவது அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் நடத்துவது போன்று பாசாங்கு செய்தால் தமிழ் மக்கள் மனங்களில் இலகுவாக இடம்பிடிக்கலாம் என்பதுவே அந்தக் கொள்கை யாகும். இதில் போட்டியென்று வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே முதலிடம் கிடைக்கும். ஆனால் இவர்களது அரச விரோத எதிர்ப்பு அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பது மட்டும் உண்மை.
வடக்கில் அரசாங்கக் கட்சி மூன்று சபைகளின் அதிகாரங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில் ஏனைய பதினெட்டு சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள் ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியின் மூலமாக வடபகுதி மக் கள் அரசாங்கத்திற்கு ஏதோவொரு விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளமை நன்கு புலனா கிறது. எனினும் வடக்கில் முன்னெடுத்துவரப்படும் சகல விதமான அபிவிருத்திப் பணிக ளும் தொடர்ந்தும் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதிபடத் தெரி வித்துள்ளது.
வடக்கில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ் மக்கள் அபிவிருத்தி ஒரு புற மிருக்கத் தமக்கு ஒரு அரசியல் தீர்வின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளார்கள். அந்தத் தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக அல்லது தமது சார்பில் அவர்களை யும் இணைத்து அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென்பதே தேர்தல் முடிவுகளில் மறைந்து காணப்படும் விடயமாக உள்ளது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக வடமாகாண மக்களிடையே கலந்துரையாடிய போது அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெருமளவு நம்பிக்கை கொண்டவர்க ளாக இல்லை எனினும் தமக்கு வேறு மார்க்கமோ அல்லது மாற்aடோ இல்லை என்ப தால் கூட்டமைப்பினரையே தொடர்ந்தும் நம்ப வேண்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்து மக்களது மனங்களில் இருந்து வெளிப்படும் உண்மையானதொரு கருத்தாகவே அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படுவதற்கு இன்று அம்மக்கள் எதிர்ப்பார்ப்பது போன்று தமிழ் தலைமைகள் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அவர்கள் தெரிவித்தது போன்று தமிழ்க்கூட்ட மைப்பை விட்டால் வேறு வழியுமில்லை என்ற நிலையே காணப்படுகிறது.
அரசாங்கமும் தமிழ்க்கூட்டமைப்பும் அரசியல் தீர்வு காணும் விடயத்திலும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களது விருப்பாகும். தமிழ் மக்கள் இதற்காகவே தமிழ்க் கூட்டமைப்பிற்குத் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். இந்த வெற்றி தமிழ்க் கூட்டமைப்பிற்குக் கிடைத்த வெற்றியல்ல. மக்களால் கூட்டமைப்பிற்குக் கிடைத்த வெற்றியே. மொத்தத்தில் இது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக