திங்கள், 29 ஆகஸ்ட், 2011

Subramaniam Swamy குறுக்கிட முடியாது என்று ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார்

;முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார்
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது.
மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக