திங்கள், 29 ஆகஸ்ட், 2011

முறைப்பாடுகளைத் தமிழில் பதிவு செய்யலாம்,யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில்

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் இனித் தமது முறைப்பாடுகளைத் தாமே தமிழில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த நேற்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில் :-
பொலிஸ் நிலையங்களில் காணப்படும் மொழிக் குறைபாட்டை நீக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கதான படிவங்களை பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.
தற்போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளைத் தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தீர்வு காணமுடியும். இடைத்தரகர்கள் இன்மையால் லஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்கள் நல்ல சேவையையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்பட்டும். மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக