கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்சினை தொடர்பாக மக்களவையில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கச்சத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கடல் எல்லைக்குள் கச்சதீவு உள்வாங்கப்படுவதன் காரணமாக அதில் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள போதும் அது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த கடற்பிராந்தியத்தில் அத்துமீறு நுழைவது இருநாட்டு நட்புறவுக்கு பங்கம் ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக