வியாழன், 25 ஆகஸ்ட், 2011

EPDP: அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருக்கும் இச்சூழலைபாதுகாக்க சகலரும் பங்களிக்க வேண்டும்!

ஊடகங்களுக்கான அறிக்கை!


இதுவரை காலமும் நடை முறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டத்தை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் நீக்கியிருப்பது சகலருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாக இருப்பினும், இச்சட்டத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாதாகமான இன்றைய சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது சகலரதும் கடமையாகும் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த கால யுத்த சூழலில் அவசரகாலச்சட்டம் என்பது நடைமுறையில் இருக்க வேண்டியது எனக்கருதி அரசாங்கத்தால் அது அமுல்ப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் அவசரகாலச்சட்டமானது சாதாரண குடிமக்களை மனித முகங்கொண்டு பார்க்கவும் வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இதே வேளை அவசரகாலச்சட்டம் நீக்கப்படுவதற்கான தேவைகள் எம்மால் உணரப்பட்ட போது இச்சட்டமானது அமுலில் இருந்து வரும் சூழலை விரைவாக மாற்றியமைக்க வேண்டும் என்று தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
இப்போது யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்க வேண்டிய தேவைகள் இல்லாதொழிந்து போன சூழலில் நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைககளின் போது இது குறித்து வலியுறுத்தியும் வந்திருக்கின்றோம்.
அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கான ஒரு கால எல்லையை தீர்மானித்து இச்சட்;டத்தை விரைவாக நீக்குவதே அரோக்கியமானது எனவும் நாம் அரசாங்கத்திடம் தெரிவித்து வந்தமை சகலரும் அறிந்ததே. இந்நிலையில் ஐனாதிபதி அவர்களும் விருப்பம் கொண்டு இன்றைய சூழலையும் கருத்தில் கொண்டு அவசரகால சட்டத்தை நீக்கியமைக்காக நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
இதே வேளை யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதற்கு பின்னரான காலச்சூலில் உருவாகிவரும் இது போன்ற முன்னேற்றகரமான மாற்றங்கள் சுயலாப அரசியல் சக்திகளுக்கு கசப்பான செய்திகளாவும், மாற்றங்கள் நிகழ்ந்து முந்நோக்கிய சமுதாயம் வளரவேண்டும் என விரும்பும் எம் போன்றவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இவைகள் மகிழ்ச்சி தரும் செய்திகளாகவும் உள்ளன.
ஆயினும், இன்று நாடெங்கும் நிலவி வரும் மர்ம மனிதர்கள் குறித்த நடமாட்டங்களும், இவைகள் குறித்த வதந்திகளும் சாதாரண குற்றவியல் சட்டங்களினால் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய கட்டாய தேவையும் உணரப்பட்டுள்ளது.
இது தவிர மாறி வரும் இச்சூழலில், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு அமைதிப்பேச்சின் மூலம் தீர்வு காண்பதற்கு தடையாக இருந்து வந்த அழிவு யுத்த எண்ணங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மறு புறத்தில் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்த தேவையான பெரும்பான்மை ஆதரவுப்பலமும் நாடாளுமன்றத்தில் கிடைக்கப்பெற்றிருக்கும் இத்தருணத்தில் இது வரை தீராப்பிரச்சினையாக இருந்து வந்த அரசியலுரிமை பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு கண்டிட ஐனாதிபதி அவர்கள் உரிய வாழிகாட்டலை வழங்குவார் என்பதும் எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அகும்.
இவ்வாறு தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவசரகாலச்சட்டம் நீக்கப்படிருப்பது தமிழ் மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று என்றும், இதை மறுபடியும் இங்கு அமுல்ப்படுத்தும் சூழல் உருவாகாமல் பாதுகாப்பதற்கு அரசியல் தீர்வு உட்பட சகல விடயங்களுக்கும் தீர்வு காணும் முயற்சிகளை சுமுகமாகவும் இணக்கமாவும் பேசித்தீர்க்கும் வழிமுறையை முன்னெடுக்க சகலரும் சேர்ந்துழைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு செயலாளர்ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக