வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தயாநிதி உதயநிதி கலாநிதி மங்காத்தா திரைத்துறையில் ஆதிக்கம்

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.
மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது.
விளம்பரங்களில் 'க்ளவுட் நைன் - சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, "அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.
படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக