திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்திய பாராளுமன்றில் இலங்கை எம்பிக்கள் அதிமுக எதிர்ப்பால் பரபரப்பு

இந்திய பாராளுமன்றில் இலங்கை எம்பிக்கள் அதிமுக எதிர்ப்பால் பரபரப்பு
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய பாராளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.

அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.

உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக