திங்கள், 1 ஆகஸ்ட், 2011

140 பேர் படுகொலை,சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள்

சிரியாவில் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை சுமார் 140 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஜனநாயக சீர் திருத்தங்களை அறிவிக்ககோரி பொது மக்கள் பிரமாண்ட போராட் டத்தை நடத்தினர்.

அதன் பிறகு இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹமா உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹமாவில் போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. அப்போது இராணுவம் போராட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் 100 பேர் பலியானார்கள். மற்ற இடங்களில் 40 பேர் பலியானார்கள்.
இந்த படுகொலை சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிரியா வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வர்ணித்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராணுவ நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக