செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம்

இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம்!



லங்கைக்குச் சொந்தமான கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு:

இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்.

ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு வரை தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டது உண்மைதான்.

ஆனால் கடந்த 6 மாதமாக ஒன்று இரண்டைத் தவிர வேறு எந்தவித அசம்பாவிதமும் கடல் பகுதியில் நடக்கவில்லை.

சீனா எங்கள் நட்பு நாடு. இந்தியா எங்கள் உறவு நாடு. இந்தியாவின் உறவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

இதனால்தான் பெங்களூரில் இலங்கை கௌரவப் பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. கௌரவப் பிரதிநிதியாக கே.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா எங்கள் வர்த்தகத்திற்கும், சுற்றுலாவிற்கும் பெரிதும் உதவுகிறது. எனவே இந்தியாவுடனான வர்த்தக உறவை மேலும் பெருக்க விரும்புகிறோம். இவ்வாறு கூறினார் பிரசாத் காரியவசம் அவ
ர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக