திங்கள், 1 ஆகஸ்ட், 2011

புலிக்குப் பயந்து, கொழும்பு வந்த வாசுகி

- அஹமட் ஷா
தாம் இதுவரை தம் புத்தியை அடகு வைத்ததனால், இருட்குகையுள் மனமே முழ்கிக்  கிடந்ததைக் கண்டடைவர். அப்போதுதான், புலிக்குப் பயந்து, கொழும்பு வந்த வாசுகிக்கு, வீடுகொடுத்து துணையாயிருந்த மாலினி, புலியடங்கிய பின் மீள  யாழுக்கு வாசுகி   குடிபுகுந்ததைப் , பார்க்கவந்தபோது, 'சிங்களவர் வருகை'எனத் துவேசம் கக்கியபோது துடைப்பக் கட்டுடன் பத்திரிகைக் காரியாலயம் செல்ல முடியும்
புலிகள் பாசிசம் மிகைத்த கொடியவர்கள் என்பது உண்மையானால், சென்ற தேர்தலில் மக்கள் சம்பந்தன் கோஸ்டியினரைப்  பகிஸ்கரித்திருக்க வேண்டும் என்பதுவே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு. ஆனால் வென்று விட்டதாக மமதையில் ‘டக்லஸ் கூட என்கிட்ட வந்திடு’ என்கிறார். மறுபக்கம் தேரோ, 'வீதிக்கு விளக்குப் போடுறதை வென்றவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்’ என்கிறார்.  இதுவரை புலிக்குசாமரம் வீசிய ரவூப் ஹக்கீம் 'சம்பந்தனார் இணக்க அரசியலை, அடிமை சாசனமாகக் கொள்ளக் கூடாது' எனக் கீற வெளிக்கிட்டுள்ளார். அரசியல், சாக்கடைதான். கழிசடைகளின் கடைசிப் புகலிடம் தான். ஐம்பது ருபாய் இலஞ்சம் வாங்குபவன் பிடிபட்டால் சிறை. ஆனால் பெரும் தொகையில் காவலரின் சலூட்டினூடாக பணம் பண்ணத் தோதான இடம் அரசியல். .. அதற்காக இதயம் தாங்கியவர்கள் இத்தனை சுயநலம் சார்ந்தோராக எப்படி  இருக்க முடியும் என்று இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது. வெறும் வாய்ச் சவடால்களை வழங்கி ஒருதலைமுறையே வாழ்வைக் காணாமல், பேச,சிரிக்க, பயணம் பண்ண, சாப்பிடவே  அஞ்சிக்கிடந்த  கிடந்த காலத்தை எம்மக்களுக்குப் பிரசவித்துத் தந்தவர்கள் நீங்கள். ஒரு இருண்ட யுகத்துள் இருந்து இப்போதுதான் எம்மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எம்மக்களுக்கு இதுவரை எல்லோரையும்  மனிதர்களாகக் கருதும்படி செய்தி சொல்லப் பத்திரிகை, சஞ்சிகை கிடைத்ததில்லை. உங்களுக்குத் தோதாக ஆட்டம் போட்ட கூத்தாடிகளும் தம் பங்குக்கு மண்டைகளைக் கழுவ பொய்யான சூரியனையும்,சந்திரன்களையும் வழிமொழிந்த காலம் இனியாவது கழிந்தொழியட்டும்.நீங்களும் இந்த ஒரே நாடான அழகிய தீவில் சகல வசதிகளையும், வாழ்வாதாரங்களையும் தலைநகர் கொழும்புவில் பெற்று வாழ்ந்து கொண்டே அந்த மக்களுக்கு மட்டும் வசதியும் வாய்ப்பும் தேவையில்லை உரிமைதான் தேவை என்றுசொல்லி உசுப்பேத்திக் கொண்டிருப்பது எந்த அறத்தில் சேர்ந்தது?. (மேலும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக