திங்கள், 1 ஆகஸ்ட், 2011

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் படிப்படியாகத்தான் செய்யமுடியும்

யாழில் மீளக்குடியேறிய முஸ்லிகளின் மீளக்குடியேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களின் மீளக்குடியேற்றத்தின் போது அரச அதிகாரிகளால் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த விதமான நியாயமும் இல்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:- யாழ்.மாநகர சபையில் முஸ்லிம்களின் மீளக்குடியேற்றத்தில் தடைகள் இருப்பதாக கூறி கவனயீர்ப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என தெரிவித்தார். யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் படிப்படியாகத்தான் செய்யமுடியும் அவர்களுக்கான நிவாரங்களை நாங்கள் வழங்கி வருகின்றோம் அவர்கள் இங்கு வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது அதற்காக அவர்களை அவசரப்பட்டு மீள்குடியேற்ற நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் புத்தளத்தில் காணிகள் வைத்திருக்கிறார்கள் அது தொடர்பாக விபரங்களை சேகரித்து வருகின்றோம். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக