ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இலங்கை பெண்ணுக்கு சென்னையில் நூதன முறையில் சத்திரசிகிச்சை

பாதி முகவளர்ச்சி குன்றிய இலங்கை பெண்ணுக்கு சென்னையில் நூதன முறையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர், பாதி முக வளர்ச்சி குறைபாடு (ஹெமிபேசியல் மைக்ரோசோமியா) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிறந்ததில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்க கண், மூக்கு, காது போன்ற குறைபாடுகளுடன் இருந்த அந்த பெண், தனது 24-வது வயதில் மிகவும் பாதிக்கப்பட்டார். அப்பெண்ணால் சாப்பிடவும், பேசவும் முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் எஸ்.எம்.பாலாஜி, முதலில் முப்பரிமான சி.பி.சி.டி. ஸ்கேன் மூலம் முக அமைப்பை பரிசோதித்தார்.

அதன் பின்னர், டிஸ்டிராக்ஷன் சத்திரசிகிச்சை செய்ய டாக்டர் பாலாஜி முடிவு செய்தார். முதலில் டிஸ்டிராக்டர் என்றும் கருவியை கீழ்த்தாடையில் பொருத்தி தாடை அமைப்பு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு, கண், மூக்கு, காது போன்றவற்றை சீரமைத்து, அப்பெண்ணின் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த சத்திசிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடந்தது.

இந்த சத்திரசிகிச்சை பற்றி கேள்விப்பட்ட இந்தியாவுக்கான இலங்கை தூதர் வி.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனைக்கு வந்து சந்திரசிகிச்சை செய்துகொண்ட பெண்ணை பார்த்து நலம் விசாரித்தார்.

மேலும், சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர் எஸ்.எம்.பாலாஜியையும் அவர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக