ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்தியா விமான நிலையத்தில் இலங்கை விமானம் தாமதம்: பயணிகள் ஆத்திரம்

இலங்கைக்கு செல்ல இருந்த பயணிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு கொழும்புக்கு ஏர்-இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இலங்கை செல்ல இருந்தது.
இதில் செல்ல 140 பயணிகள் அதிகாலை 4 மணிக்கு வந்து குடியுரிமை, சுங்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற காத்திருந்தனர்.
விமானி வராததால் காலை 7 மணி வரை விமானத்தில் பயணிகளை ஏற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
உடனே விமான நிறுவன அதிகாரிகள் சென்று பயணிகளை சமரசம் செய்தனர். விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வரமுடியவில்லை. மாற்று விமானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
அவர் வந்ததும் விமானத்தில் இறுதி கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின்னர் பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. விமானம் பகல் இலங்கைக்கு சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக