செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அரசுக்கு நிபந்தனை எதுவும் விதிக்கவில்லையாம் விதிச்சிட்டாலும் .: சம்பந்தர்

அரசாங்கத்திற்கு தாம் முன்வைத்த மூன்று விடயங்களும் நிபந்தனைகள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். உதயன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காத நிலையில் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆட்சிக் கட்டமைப்பு , சட்ட அதிகாரம், மத்திய அரசுக்கும் அதிகார பகிர்வு அலகுக்கும் இடையில் கருமங்கள், கடமைகள் எவை என்ற பிரிப்பு, நிதி மற்றும் வரி வசூலிப்பு ஆகிய தமது மூன்று கோரிக்கைகள் தொர்பில் அரசாங்கம் இரண்டு வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை முன்வைக்கமாறு கேட்டிருந்ததாகவும், அந்த இரண்டு வாரம் என்பதை நிபந்தனையாகக் குறிப்பிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
“கூட்டமைப்பின் மூன்று கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் அர்த்தமில்லை ” என்றார் அவர்.
மேலும், அரசியல் தீர்வு காண்பதற்கு உண்மையில் இரு தரப்பினரும் இதயசுத்தியுடன் பேசவேண்டும் என்று கூறிய அவர், அடுத்த கட்டம் பற்றிப் பேசுவதற்கு இன்னும் காலம் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தவிடயம் தொடர்பாக தற்போதைக்கு தாம் நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்கவேண்டிய நேரத்தில் சரியாக எடுப்போம் எனவும் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு கூட்டமைப்புத் தயார் என பலவாறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவரும் இந்த நிலையில் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக