ஒரு கல்விமான் மீது திரும்ப திரும்ப திட்டு வாங்கி கொடுக்கிறது தேசம் நெற்.கூலார் ஏதோ தமிழ் கல்விச்சமூகத்தையே கட்டியாளும் வல்லமை படைத்தவர் என்ற பிரம்மையில் அவரை பொது மேடைக்கு அழைத்து வந்தது தேசம் நெற்.
ஆனாலும், கூலாரே எதிர்பார்த்திருக்க மாட்டார் தவராஜாதன்னை தடம் போட்டு விழுத்துவார் என்று. சாதாரண மாணவர்களுக்கு சட்டம்பி தோரணையில் வகுப்பெடுக்கும் கூலார் தவராஜாவுக்கும் இலகுவில் வகுப்பு நடத்தலாம் என்ற கனவோடு வந்தாரோ தெரியவில்லை.மக்களை ஏமாற்றலாம்!… ஊடகங்களை ஏமாற்றலாம்!… ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது என்று தவராஜா கூலாரை நோக்கி சொன்னவைகள் பொய்யானவைகள் அல்ல என்பது அந்த கேள்வி நேரத்தில் மெயப்பிக்கப்பட்டிருந்தது. சகல ஊடகங்களுக்கும் கூலார் கொடுத்த அவதூறுகளுக்கு தவராஜா கொடுத்த விளங்கங்கள் ஆதராப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்திற்கும் ஆவணங்களை எடுத்து நீட்டினார் தவராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக