புதன், 10 ஆகஸ்ட், 2011

இலங்கை மருத்துவர் பாலியல் சேட்டை பிரிட்டனில் கர்ப்பிணிப் பெண்களிடம்

மருத்துவ சோதனைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்கணை பாலியல் ரீதியாக தாக்கியதாக இலங்கையரான மருத்துவர் ஒருவர் மீது பிரிட்டனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் மருத்துவமாது ஒருவரின் மார்பில் முத்தமிட முயன்றதாகவும் இம்மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பொது மருத்துவச் சபையில் குற்றம் சுமத்தப்பட்டதாக பிரிட்டனின் டெய்லிமெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.  இவர் 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மருத்துவராக தகைமை பெற்றுள்ளார். மேற்படி சோதனையை மேற்கொள்வதற்கு முன் 'இது உன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்' என பொது மருத்துவச் சபையின் விசாரணைக் குழு முன்னிலையில தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைக்குமுன் நோயாளி கீழ் ஆடைகளை அகற்ற வேண்டும். அப்பெண் மிக ஆபத்திற்குள்ளானதாகவும் சங்கடமாகவும் உணர்ந்தார் மனுதாரிரின் சட்டத்தரணி கூறினார். மற்றொரு பெண், நீத் அன்ட் போர்ட் டால்பாட் வைத்தியசாலைக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தான் ஸ்கேன் பரிசோதனையொன்றுக்குச் சென்றபோது, மேற்படி வைத்தியசர் அப்பெண்ணின் பிருஷ்டத்தை திருகியதாக அப்பெண்ணின் சட்டத்தரணி கூறினார். அதேவேளை கடந்த வருடம் ஜூலை மாதம் மேற்படி மருத்துவர் அங்க சேட்டை புரிந்ததாக மருத்துவ மாது ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக