அஜீத் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும், அவரது 50வது படமான மங்காத்தாவை, "சிறுத்தை" படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கியுள்ளார். க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, ஆன்டிரியா, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா". யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில், வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. "மங்காத்தா" படத்தை துரை தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார். கடந்த ஆட்சியில் இருந்த வரைக்கும், வந்த படங்களை எல்லாம் இவர்களே வாங்கி, ஒவ்வொரு படத்தையும் ஆஹா... ஓஹோ... என பிரம்மாண்டமாக வெளியிட்டனர். ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவும் இல்லை, வெளியீடவும் இல்லை. மேலும் இதற்கு முன்னர், க்ளவுடு நைன் பேனரில் வெளிவந்த, "வ குவாட்டர் கட்டிங்" உள்ளிட்ட படங்களால், பெரும் நஷ்டம் அடைந்ததாக தியேட்டர் அதிபர்கள் புகார் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில் மங்காத்தாவை, க்ளவுடு நைன் பேனரில் வெளியீட்டால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தயங்கி வருகின்றனர். அதேசமயம், ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பும் படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.
இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு மங்காத்தா படத்தை வாங்கி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் இதற்குமுன் பருத்திவீரன், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். ஞானவேல் ராஜா பட பேனர் மூலம், மங்காத்தா படம் வெளியாக இருப்பதால், மங்காத்தா ரிலீஸ் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்துள்ளது. இதனிடையே வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி, ரிலீசாவதாக இருந்த மங்காத்தா, ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக