யாழ் நாவாந்துறை பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் வந்ததாக ஏற்பட்ட பதற்ற சூழலால் தாக்குதலுக்குள்ளானவர்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும். சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (23) யாழ் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார் நேற்றைய தினம் இரவு நாவாந்துறை பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாடியதாகவும் அவர்களை துரத்திச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுமார் 102 பேர் படையினரால் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 98 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவினை அடுத்து சிகிச்சைகளுக்காக யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று இரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் இது தொடர இடமளிக்க முடியாதென்றும் அது தொடர்பில் தாம் உரிய தரப்பினரோடு கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார். அமைச்சர் அவர்களுடன் சட்டத்தரணி ரெங்கன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக