சனி, 13 ஆகஸ்ட், 2011

மதுரையில் விஜய்யின் விழா! தன் ரசிகர் பலத்தை அப்படியே அரசியல்

வேலாயுதம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வைத்து பிரம்மாண்ட விழா நடத்த விருப்பப்பட்டார் விஜய். ஆனால் முதல்வர் வருவது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதிரையில் ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

படத்தின் துவக்க விழாவையும் தன் ரசிகர்கள் முன்பே நடத்தினார் விஜய். அதே போல் இசை வெளியிட்டு விழாவும் நடத்த இருக்கிறாராம். இதற்காக பணிகள் நடந்து வருகிறது. தயாரிப்பாளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இதை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் நடந்தவுடன் மதுரை நகரமே நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருகிறது. மதுரையில் இருக்கும் தன் ரசிகர் பலத்தை காட்டவும், அப்படியே அரசியல் பலத்தை வளர்க்கவும் தான் இந்த ப்ளான் என்று சொல்கிறது விஜய் வட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக