ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தமிழ் வைத்தியர்கள் நிந்திக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் _

சுகாதார அமைச்சின் வைத்தியரல்லாத அமைச்சின் செயலாளர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட விரிவுரையில் பங்கெடுத்த தமிழ் வைத்தியர்கள் நிந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யுமாறு அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலமான வேண்டுகோளை விடுத்துள்ளது.

வைத்தியர் நோயாளி மற்றும் தொடர்பாடல் என்ற தலைப்பில் இடம்பெற்ற விரிவுரையானது அமைச்சின் செயலாளரினால் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ் வைத்தியர்கள் தமக்கு புரியவில்லை எனவே, விரிவுரையை ஆங்கிலத்தில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சின் செயலாளர் அவர்களை நிந்தித்து, அரங்கைவிட்டு வெளியேற்றியதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து விரிவுரையில் பங்கேற்ற சில சிங்கள வைத்தியர்களும் அரங்கைவிட்டு வெளியேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக