ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தமிழ் மக்கள் சிலரைப் புளகாங்கிதம் அடையச் செய்தது.வெளிக்கிளம்பிய வீர வசனங்களும்

விழுந்தவன் மீசையில் மண் படாத கதை

அரசாங்கத்துக்கு வீரச் சவால் விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறது. கடந்த 18ஆம் திகதியுடன் அரசாங்கத் திற்கு விடுத்த கால அவகாசம் முடிவடைந்ததும் தமிழ்க் கூட்டமைப்பு தனது கலத் தைக் காட்டும் என்றே தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் அரசிற்குக் காலக்கெடு விதித்த விதமும் அச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் தலைவர்களிடமிருந்து வெளிக்கிளம்பிய வீர வசனங்களும் முன்னர் புலிகள் களத்தில் நின்று போராடியதை விடவும் தமிழ் மக்கள் சிலரைப் புளகாங்கிதம் அடையச் செய்தது.
தமிழ்க் கூட்டமைப்பு விடுத்திருந்த கால அவகாசத்திற்குள் அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் என்ன நடக்குமோ எனும் அளவிற்குப் பயம் கலந்த உணர்வுடன் கூட்டமைப்பின் பலத் தைக் காட்டக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் எனவும் தமிழ் மக்களில் சிலர் எதிர்பார்த்துக் காத் திருந்தனர். ஆனால் பதினெட்டாம் திகதி கழிந்து சென்று மூன்று தினங்களாகிவிட்டது ஒன் றுமே நடக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக