சனி, 20 ஆகஸ்ட், 2011

எனது சகோதரனை என்னிடமிருந்து தூர விலத்தி வைக்க இந்து பத்திரிகை விரும்புகிறது

Gotabhaya_Rajapaksaபாதுகாப்புச் செயலாளர் கோதாபய கூறுகிறார்
இந்தியத் தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடேக்கு அண்மையில் தான் வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டு "இந்து' பத்திரிகையானது தன்னை இலக்கு வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை கவலை தெரிவித்திருக்கிறார். தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் சார்பில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜா வணசுந்தரவால்  இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுடன் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் யுத்தத்திற்குப் பின்னரான சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றியபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011 ஆகஸ்ட் 11 இல் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது "அவரின் அலுவல்களைச் சார்ந்திராத உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பாக அவரின் சகோதரரின் பிரக்ஞை பிரவாகத்திலிருந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைத் தான் தூர விலக்கி வைத்திருக்க வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தும் அந்தப் பேட்டி தொடர்பாக தன்னை சாடியிருந்தமை குறித்து தான் ஆச்சரியப்பட்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை  விபர ஆய்வு மற்றும் ஒளிநாடா அங்குரார்ப்பண நிகழ்வின்போது அந்தப் பேட்டி அளிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக