சனி, 20 ஆகஸ்ட், 2011

கூட்டமைப்பு சத்தியப் பிரமாணம் விஷகருத்துக்களையையே வாந்தி எடுத்தார்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா. சம்பந்தன் சத்தியப்பிரமாணத்தை ஏற்று கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
சம்பந்தன் தொடக்கம் அத்தனை பெரும் சொல்லி வைத்தால்போல் புலிபாணி விஷகருத்துக்களையையே வாந்தி எடுத்தார்கள்.அவ்வளவு பதவி ஆசை சுயநலம் ஏமாறுவதற்கு நாம் தயாராக இருக்கும்போது அவர்களுக்கு என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக