சனி, 13 ஆகஸ்ட், 2011

பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை

பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால், பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இன்று எச்சரித்துள்ளார்.
அண்மைய நாட்களில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பாக அப்பாவிகளும் பொலிஸாரும் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பங்களை நாம் கண்டுள்ளோம்.
இத்தகைய நடவடிக்கையை மக்கள் எதிர்காலத்தில் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளார்.
பொலிஸார் செயற்படாமையின் காரணமாகவே ஹப்புத்தளையில் இரு அப்பாவிகள் கிறீஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஆத்திரமடைந்த கிராமவாசிகளால் கொல்லப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

பொலிஸார் யுத்தத்தின்போது பெரும் சேவையாற்றினர். ஆனால் இப்போது யுத்தத்தின் பின்னரான சூழ்நிலைக்கு ஏற்பவும் மக்கள் சார்பானதாகவும் மாறவேண்டும் எனவும் கோத்தபாய கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக