சனி, 13 ஆகஸ்ட், 2011

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்: ராஜிவ் கொலைக்குற்றவாளியின் தாயார் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தனது மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர் உள்பட முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று நிராகரித்தார். எனவே, இவர்கள் தூக்கிலிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் 70 வயது தாயார், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நளினிக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது 18 வது குற்றவாளியான எனது மகனுக்கு ஏன் கருணை காட்டக்கூடாது என்று கேட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18-வது குற்றவாளி பேரறிவாளன். ராஜீவ் கொலையாளி தனு பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பேட்டரிகளை வாங்கிக்கொடுத்து குண்டு தயார் செய்வதற்கு உதவினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக