வியாழன், 18 ஆகஸ்ட், 2011

போபாலில் ஊழலை எதிர்த்து போராடிய பெண் சுட்டுக் கொலை

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஊழலை எதிர்த்து போராடி வந்த ஷெஹ்லா மசூத் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷெஹ்லா மசூத். ஊழலை எதிர்த்து போராடியவர், தகவல் அறியும் சட்ட ஆர்வலர், சூற்றுச்சூழல் ஆர்வலர். அவர் மத்திய பிரததேசத்தில் புலிகளைக் காக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்.
நேற்று போபால், மசூத் கோ இ பிசா பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்தார் என்று போலீஸ் அதிகாரி சைலேந்திர ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் குழுவிற்கு மசூத் தலைமை தாங்கி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அன்னா ஹஸாரே முதன்முதலாக டெல்லியில் போராட்டம் நடத்தியபோது மசூத் மத்திய பிரதேசத்தில் நடத்தினார்.
கடந்த திங்கட்கிழமை அன்று மசூத் ஊழலை வெளிப்படுத்த உறுதி எடுத்ததோடு அதை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மறுநாளே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் அஜய் துபே கூறியதாவது,
மாநிலத்தில் பல புலிகள் இறந்துபோது ஷெஹ்லா தான் துணிச்சலாக கேள்வி கேட்டார். ஒரு வேளை புலிகளை வேட்டையாடும் கூட்டம் அவரைக் கொன்றிருக்கலாம்.
இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ தான் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக