புதன், 10 ஆகஸ்ட், 2011

எதிர்ப்பால் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி! (அதிர்ச்சிப் படம்)


காதலை ஊர் கூடி எதிர்த்ததினால் காதல் ஜோடியொன்று பனை மரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட அகோர சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் கோப்பாய் இராசவீதியில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் முன்னைய காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து வேறு நபர்களை திருமணம் செய்துள்ளர்.

உரும்பிராய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அருளானந்தம் பாலசிங்கம் என்பவரும், 24 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான மயூரன் இந்திசா என்பவருமே இவ்வாறு மரணித்தவர்கள்.


பனைமரத்தில் கயிற்றினால் தூக்கு போட்டு காதல் ஜோடி மரணித்த செய்தி அறிந்து அப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்தவர்களாக காணப்படுகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக