வியாழன், 4 ஆகஸ்ட், 2011

போட்டோவை ஜூ.வி-யில் பார்த்ததும் சி.எம். ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்க.

''ஜெயலலிதா மேடம்போல ஒரு ஆளுக்கு சேலை கட்டி, அவரை அசிங்கப்படுத்திய போட்டோவை ஜூ.வி-யில் பார்த்ததும் சி.எம். ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்க. ஏ.டி.ஜி.பி-யைக் கூப்பிட்டு, 'ஹூ இஸ் தட் சேலம் சிட்டி கமிஷனர் சொக்கலிங்கம்?’னு கேட்டாங்க. ஏ.டி.ஜி.பி-யோ, 'மேடம்.. அவர் 86 பேட்ச்...’ என்று ஆரம்பிக்க... 'நான் சொக்கலிங்கம் பயோடேட்டா கேட்கலை. சேலத்தில் என்ன நடந்துட்டு இருக்குது? அவர் அங்கே என்ன பண்ணிட்டு இருக்கார்? வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கூஜா தூக்கிட்டு இருக்காரா? ஏன் இந்த விஷயத்தை என்னோட நாலெட்ஜுக்குக் கொண்டுவரவே இல்லை. வெரி பேட்!’ என்று சத்தம் போட்டு அனுப்பினாங்க. அதுக்குப் பிறகுதான் ஏ.டி.ஜி.பி., சேலம் கமிஷனரைப் பிடிச்சு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். 'இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு. ஒரு சின்னத் தகவல்கூட என் கவனத்துக்கு வரலை. பத்திரிகையில் வந்து, சி.எம். கூப்பிட்டுச் சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அத்தனை அசிங்கம் நடந்தபோதும் போலீஸ் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கீங்க. நீங்க போலீஸ்தானே? வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வாட்ச்மேன் இல்லையே!

சம்பவம் நடந்தபோது, யார் எல்லாம் அங்கே இருந்தாங்களோ... அத்தனை பேரையும் டிரான்ஸ்ஃபர் பண்ணுங்க. எந்த கேஸ் போடுவீங்களோ... எனக்குத் தெரியாது, வீரபாண்டி ஆறுமுகத்தை உடனே கைது பண்ணி ரிமாண்ட் பண்ணுங்க. இதுல ஏதாவது தப்பு நடந்தா, நீங்க எல்லோருமே சஸ்பெண்ட் ஆக வேண்டி இருக்கும்.’ எனப் பிரித்து மேய்ந்துவிட்டாராம். அதுக்குப் பிறகுதான் ஆறுமுகத்தைக் கைது பண்ணினாங்க. ஆறுமுகத்துக்கு ஆதரவா செயல்பட்ட ஒரு டெபுடி கமிஷனர், ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர், 10 இன்ஸ்பெக்டர்கள்னு அத்தனை பேருக்கும் உடனடியாக டிரான்ஸ்ஃபர் உத்தரவு. மேடம்போல சேலை அணிந்து ஆட்டம் போட்ட அந்த நபரோட முகம் நல்லாவே தெரியுது. அவர் தி.மு.க-வின் சேலம் மாநகர 36-வது வார்டு துணைச் செயலாளர் சேகர் என்பதும், அவர் கையைப் பிடிச்சிட்டு டான்ஸ் ஆடி அசிங்கப்படுத்தியது 36-வது வார்டு செயலாளர் சம்பத் என்பதும் தெரிய வந்திருக்கு. அவங்களை உடனடியாக் கைது செய்யவும் உத்தரவு போடப்பட்டது. தகவல் தெரிஞ்சதும் அவங்க இரண்டு பேருமே தலைமறைவாகிட்டாங்க...'' என்று சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இவ்வளவு அமளிதுமளிகள் நடந்தும் வாய் திறக்காமலேயே அமைதியாக இருந்த சேலம் மாநகர அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஜெ. கூடிய சீக்கிரமே அ.தி.மு.க-விலும் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக