வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சீமானைக் கைவிட்டார் விஜய்?

புலி வருது கதையாக சீமான் - விஜய் இணையப் போகிறார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. காவலன் முடிந்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, இல்லையில்லை நண்பனுக்குப் பிறகு என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

இப்போது சீமானுக்கு படமே இல்லையோ என்று கேட்கும்படியாகிவிட்டது நிலைமை.

காரணம் 2013 வரை விஜய் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தமாகி, அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இயக்குனர் ஹரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறார்கள்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபரில் துவங்கக்கூடும். 2012-ல் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் சீமான் படம்? சீமான் இரண்டு வெவ்வேறு க்ளைமாக்ஸ்களைச் சொல்லியும் விஜய்க்கு திருப்தியில்லையாம். இப்போதைக்கு அதுபற்றி விஜய் பேச மறுக்கிறாராம்.

விஜய்யின் இந்த மவுனம் தொடர்ந்தால், கைவசம் தயாராக உள்ள 'கோபம்' படத்தினை தொடங்கிவிடுவார் சீமான். இதை ஏற்கெனவே அவர் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக