செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

சன் டிவிக்கு எதிராக புகார் கொடுத்தவர்களில் மேலும் மூவர் வாபஸ் பெற முடிவு!

சென்னை: சன்டிவி முன்னாள் தலைமை அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு எதிராக கிரிமினல் புகார்கள் கொடுத்த 3 பேர், இப்போது பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் வாபஸ் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் ஓர் அங்கமாக சன் பிக்சர்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் திரைப்பட விநியோகம், தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சக்சேனா மீது அடுத்தடுத்து மிரட்டல் புகார் கொடுத்தவர்கள் தற்போது அதை வாபஸ் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தால் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது. இதனால் சிறையில் உள்ள சக்சேனா விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சக்சேனாவுக்கு எதிராக ஜூலை மாதம் 5 புகார்கள் கூறப்பட்டன. தீராத விளையாட்டுப் பிள்ளை, எந்திரன் மற்றும் மாப்பிள்ளை தொடர்பாக இந்த வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் முத்துக்குமுத்தாக இயக்குர் ராசு மதுரவன் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவை தவிர வேறு சில வழக்குகளும் அவர் மீது போடப்பட்டன.

இதையடுத்து சச்சேனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2 வழக்குளை புகார் கூறியவர்கள் வாபஸ் சமீபத்தில் பெற்றனர். இதனால் அந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்து எந்திரன் தொடர்பாக புகார் கொடுத்தவர்கள், அந்த புகார்களை வாபஸ் பெற விரும்புவதாகவும், சுமூகமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ளப் போவதாகவும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனுக்களை ஏற்று நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்தால், சக்சேனா சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக