வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜாபர்சேட்வீடு தரைக்கு இத்தாலி பளிங்குக் கற்கள், நீச்சல் குளம், ஜிம்னாசியம், லிஃப்ட்

ஜாபரின் மனைவியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கரும் சேர்ந்து ‘லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தோடு கூட்டாக வியாபாரம் செய்துள்ளனர். அந்த நிறுவனம் ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபருக்கும், துர்கா சங்கருக்கும் ஒதுக்கிய நிலத்தில், 12 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டரைக் கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஒட்டுமொத்த அடுக்கு மாடியும், ‘சென்ட்ரலைஸ்டு’ ஏ.சி. வசதி கொண்டது. இது தவிர, ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்கும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள், தரைக்கு இத்தாலி பளிங்குக் கற்கள், நீச்சல் குளம், ஜிம்னாசியம், லிஃப்ட், ஜெனரேட்டர் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டு வருகிறது.
இதற்காகவா சமூக சேவகர் என்ற பிரிவில் நிலம் ஒதுக்கினார்கள்?’’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் அந்த அதிகாரி.

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் ஜாபர் மோசமான புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளார் என்றே தோன்ற வைக்கிறது.
‘‘செவ்வாயன்று காலை 8 மணிக்கு அண்ணா நகரில் உள்ள ஜாபர் வீட்டுக்குள், விசாரணை அதிகாரி கூடுதல் எஸ்.பி. சுப்பையாவும், கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையிலான டீமும் நுழைந்தது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பல்வேறு சோதனைகளில் பங்கெடுத்து நீண்ட அனுபவம் கொண்ட இன்ஸ்பெக்டர் வேலன் சுப்ரமணியும் இந்த டீமில் இடம்பெற்றிருந்தார்.

வீட்டினுள் நுழைந்ததும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட அதிகாரிகள், சோதனை நடத்தப் போகும் விவரத்தை ஜாபர் சேட்டிடம் தெரிவித்து, ‘உங்கள் மனைவியை ஒத்துழைக்கச் சொல்லுங்கள்’ என்று ஜாபரிடம் போனில் தெரிவித்த பின், சோதனையைத் தொடங்க உத்தரவிட்டார் கூடுதல் எஸ்.பி. சுப்பையா.
சோதனையின் போது ஜாபர் சேட்டின் லேப்டாப் மற்றும் 8 ஐபாட் கருவிகளும், 35 சி.டி.க்களும் சிக்கியிருக்கின்றன. அதில் ஒரு சி.டி.யை போட்டுப் பார்த்த சுப்பையா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரோடு ஜாபர் நடத்திய உரையாடல் அந்த சி.டி.யில் இருந்திருக்கிறது.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கே.பி. மகேந்திரனைத் தொடர்பு கொண்டார் சுப்பையா. இதன்பின்னர், லேப்டாப் உள்ளிட்ட கருவிகள் மட்டும் முதலில் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, சோதனையில் சிக்கிய பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய விஜிலென்ஸ் அதிகாரிகள் ஜாபரின் வீட்டை விட்டுக் கிளம்பினர்.
இந்நிலையில், லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்திருக்கின்றனர். ‘எங்கள் எம்.டி. வராமல் எந்த ஆவணங்களையும் ஒப்படைக்க முடியாது’ என்று சாக்குப்போக்கு சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அலுவலகத்தை சோதனையிடச் சென்ற டி.எஸ்.பி. அலி பாஷா, சோதனைக்கு ஒத்துழைத்து ஆக வேண்டிய அவசியத்தை விளக்கியதும், ஒரு வழியாக ஒத்துழை த்திருக்கிறார்கள். துர்கா சங்கர் வீட்டுக்குச் சென்ற டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையிலான டீமும், பல்வேறு ஆவணங்களை அள்ளி வந்திருக்கிறது.

ஜாபர் வீட்டுக்கு அருகிலேயே கஸ்தூரி ராஜா என்ற ஜாபரின் நண்பர் வீடும் சோதனைக்குத் தப்பவில்லை. பல்வேறு ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகளைச் செய்து வரும், இந்த கஸ்தூரி ராஜாவின் வீடு, வெள்ளை மாளிகை என்று வர்ணிக்கும் அளவுக்கு மிக ஆடம்பரமாக இருந்தது. இவர்தான் ஜாபரின் பல்வேறு முதலீடுகளை ரியல் எஸ்டேட் டில் ஜாபர் சார்பாக செய்து வருகிறார். ஜாபரின் நண்பர் ஜான்சன் வீட்டில் மட்டும் ரூ.50 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக