வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் இந்தர்சந்த் ஜெயின் ஓட்டல் அதிபரான இவர், எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், ஒரு மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:
சென்னை தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலையில், உள்ள 2 கிரவுண்டு நிலம் ஒன்றிற்கு நடிகை விஜயசாந்தி, பவர் ஏஜெண்டாக உள்ளார். இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொண்ட அவர், அதற்காக, ரூ.5 கோடி பணமும் பெற்றுக் கொண்டார். நிலம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. 

ஆனால் குறிப்பிட்ட நிலத்தை எனக்கு தராமல் வேறு ஒருவருக்கு விஜய சாந்தி விற்பனை செய்து மோசடி செய்து விட்டார். நான் கொடுத்த ரூ.5 கோடியையும் என்னிடம் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு இந்தர்சந்த் ஜெயின் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு விஜயசாந்தி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக