ராஜீவ்காந்தி கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரிழந்தார். இதுபற்றிய போலீஸ் விசாரணையில் ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை எதிர்த்து செங்கொடி தீக்குளித்தாக அவருடைய சகோதரர் தெரிவித்தார்.இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக