சனி, 13 ஆகஸ்ட், 2011

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உரிமையாளர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை

வெளிநாடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியம்’

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமது காணிகளுக்கான உறுதியை கொண்டிராதவர்கள், இரண்டு மாதத்திற்குள் உரிய பத்திரங்களுடன் தத்தமது கிராம சேவையாளர்கள் ஊடாக பிரதேச செயலாளருக்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்களும், உரிய பிரதேச செயலாளருக்கு இணையத்தளம் மூலம் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இச்சேவைக்கான விண்ணப்பப்படிவம், காணிகள் அமைச்சால், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகம் மூலம் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளது.
பிரதேச செயலாளர்களுக்கு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணிகள் அமைச்சின் செயலாளர் அசோகா பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இந் நடவடிக்கைகளுக்கென விசேட குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக