சனி, 13 ஆகஸ்ட், 2011

25 கார்களில் பங்காரு அடிகளின் பக்தர்கள் சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்

25 கார்களில் வந்த பக்தர்கள் ஆவேசம் பங்காரு அடிகளின் பக்தர்கள் சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்
: சுங்கச்சாவடி சூறையாடல்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 25 கார்களில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை அருகே இருந்த சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு பணம் கேட்டு ரசீது கொடுத்தனர்.
பணம் கொடுக்க பக்தர்கள் மறுத்தனர்.  இலவச அனுமதி அளிக்கும்படி கேட்டனர். எம்.எல்.ஏ., அமைசர்களுக்குத்தான் இலவச அனுமதி. பக்தர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லவும், ஆவேசமடைந்த பக்தர்கள், சுங்கச்சாவடியை சூறையாடினர்.
தடுப்பு கம்பி, பாதுகாப்பு அறை என்று ஒட்டுமொத்தத்தையும் நொறுக்கிவிட்டு காரில் தப்பிவிட்டனர். 4 கார்களூம், சிலர் மட்டும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் சிக்கொண்டனர்.
அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக