புதன், 24 ஆகஸ்ட், 2011

பொங்கு தமிழ் பாணியிலான போராட்டமொன்றை படையினர் முறியடித்துள்ளனர்-தி ஐலண்ட் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது!

பொங்கு தமிழ் பேரணி பாணியில் நடத்தப்படவிருந்த போராட்டமொன்றை படைமயினர் முறியடித்துள்ளதாக தி ஐலண்ட் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பிரதேசத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புலிகளின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த நிறுத்த காலத்தில் இவ்வாறான பாரிய பொங்குதமிழ் பேரணிகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே பணியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பங்கு பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.

இதேவேளை, கிறிஸ் பேய் பதற்றத்தை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்போருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக