வியாழன், 4 ஆகஸ்ட், 2011

துரைமுருகன்: பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக சரித்திரம் இல்லை

கோவை: பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக அல்ல, அழிந்ததாக மட்டுமே வரலாறில் உள்ளது என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அ.தி.மு.க., அரசை சபித்துள்ளார்.

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காண, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பழனிச்சாமி, சென்னை மேயர் சுப்ரமணியன், பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் லியோனி, வீரபாண்டி ஆறுமுகம் மனைவி, மகன் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு வந்தனர்.

சந்திப்பிற்கு பின் சிறையை விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அ.தி.மு.க., அரசு பொய் வழக்கில் தி.மு.க.,வினரை கைது செய்து

சிறையில் அடைத்துள்ளது. இவர்களுக்கென தனி சலுகை எதுவும் வழங்கவில்லை. சிறை விதிக்குட்பட்டு, சிறை அதிகாரிகள் சில சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

தி.மு.க -வினர் மீது பொய் வழக்கு போடவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இதை போலீஸ் அதிகாரிகள் கூறக்கூடாது. வழக்கு உண்மையா, அல்லது பொய்யா என கோர்ட் தான் தீர்மானிக்கும். இந்த வழக்குகளை தி.மு.க. சட்டப்படி சந்திக்கும். பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக சரித்திரம் இல்லை. அழிந்ததாகத் தான் வரலாறு கூறுகிறது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக