ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

நைஜீரியாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்18 பேர் உடல் சிதறி பலி!

நைஜீரியாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரிய தலைநகர் அபுஜாவில் 4 மாடி கட்டிடத்தில் ஐ.நா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் செயல்படுகின்றன. இந்நிலையில் நேற்று மர்ம ஆசாமிகள் ஒரு காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி, ஐ.நா கட்டிடத்தின் தரைதளத்துக்குள் வேகமாக புகுந்தனர். காரை வெடிக்க செய்ததில் கட்டிடம் நொறுங்கியது.

இந்த கட்டிடத்தில் 400க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். கார் குண்டு வெடித்ததில் 18 பேர் உடல் சிதறி பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஐ.நா உள்ளூர் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். உள்ளூர் போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் குட்லக் ஜோனாத்தனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ÔÔகார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து அதிபர் அறிக்கை வெளியிடுவார்ÕÕ என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக