புதன், 20 ஜூலை, 2011

Sonia Agarwal போதும் திருமண வாழ்க்கை... இனி சலிக்கும் வரை சினிமாதான்

சோனியா செல்வராகவனாக இருந்து, மீண்டும் சோனியா அகர்வாலாக மாறிவிட்டதில் ஏக சந்தோஷம் தெரிகிறது சோனியாவிடம். அந்த சந்ததோஷம் அவர் உருவத்திலும் பளிச்சென்று எதிரொலிக்கிறது.

விவாகரத்துக்குப் பிறகு வானம் படத்தில் நடித்த சோனியா, இப்போது 'சோலோ ஹீரோயினாக' நடிக்கும் படம் ஒரு நடிகையின் கதை.

ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார். தலைப்பிலேயே படத்தின் கதை தெரிந்திருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு.

படம் பார்க்கும் நடிகைகள் அத்தனை பேருக்குமே இது நம்ம கதையோ என்ற நினைப்பை ஏற்படுத்துமாம். அந்த அளவு சினிமாவில் பொதுவான சில விஷயங்களை பற்றி இந்தப் படம் பேசவிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் மிகக் கவர்ச்சியான காட்சிகள் எல்லாம் உண்டாம். சோனியா அகர்வால் அத்தனைக்கும் சம்மதித்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருகிறாராம்.

மீண்டும் மணவாழ்க்கை குறித்து சோனியாவிடம் கேட்டபோது, "மீண்டும் கல்யாணமா... சான்ஸே இல்லை. அந்த நாள்களை நினைத்துப் பார்க்க்க கூட விரும்பாத அளவுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது.

இனி சினிமாதான். சலிக்கச் சலிக்க சினிமாவில் நடிக்கப் போகிறேன். என் தேவையெல்லாம் நல்ல வேடம், சவாலான பாத்திரங்கள், அதற்கேற்ற சம்பளம்... அவ்வளவுதான்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக