செவ்வாய், 5 ஜூலை, 2011

PMK அந்தர்பல்டிக்குத் தயார்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மரண அடி கிடைத்ததைத் தொடர்ந்து கட்சி சின்னத்தையும், கூடவே கொஞ்சநஞ்சம் கட்சித் தொண்டர்களையும் இழந்த பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ், வரும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்று பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ரைட்டு…! அடுத்த அந்தர்பல்டிக்கு ஆள் மே-13-ம் தேதி காலை 9.30 மணிக்கே ரெடியாகியாச்சு என்பது உண்மை தான்!
ரபி பெர்னார்டு போன்ற அரசியல் சம்பந்தமில்லாதவர்களுக்கெல்லாம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அள்ளித் தரும் ‘அம்மா’, தனது மகனுக்கு கருணை காட்ட மாட்டாரா என்ற நப்பாசை தான் ராமதாஸ் மாற்றத்திற்கு முழு முதல் காரணமாக இருக்கும்.
ஆனாலும், இனிமேல் ராமதாஸ் விஷயத்தில் ஜெ. திரும்பிக் கூட பார்க்க மாட்டார் என்பது அரசியல் கத்துக்குட்டிகளுக்கு கூட எளிதில் விளங்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக