செவ்வாய், 5 ஜூலை, 2011

அனைத்து எரிபொருள் நிலையங்களும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதென கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

இந்த பரிசோதனையின் போது தரமற்ற எரிபொருள் அகப்பட்டால் அதற்கு பதிலாக தரமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கனியவள கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 9 பிரதேச காரியாலயங்களின் ஊடாக இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் இன்றைய பாராளுமன்ற உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைக்கப்பட்டுள்ள குழுவின் தீர்மானத்திற்கு ஏற்ப எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக